Wednesday, March 29, 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்திடம் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே, அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் தொடர்பில் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கோரிக்கைகளாவன,

1. ஐனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை காலமும் வெளியிடப்படவில்லை, அதற்கான ஒரு நிவாரணமாக கொடுக்கப்படவில்லை. அந்த அறிக்கை மிகவிரைவில் வெளியிட வேண்டும்.

2. காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதன் அறிக்கையின் இழுத்தடிப்புகள் செய்யப்படுகின்றன. மேலும், பொலிஸாரின் தாமத்தினால் இழுப்பட்டுக் கொண்டு சென்று கொண்டு இருக்கின்றன. இதனை மிக விரைவில் கொண்டுவர வேண்டும்.

3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இரண்டு வருடகால அவகாசம் கொடுத்த நிலையிலே ஒவ்வொரு காலத்திற்கு காலம் என்ன முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. விசாரணை மேற்கொள்ள வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயத்தில் என்ன முன்னேற்றம் கண்டுள்ளோம், காணவேண்டிய நிலை நாம் அரசாங்கத்திற்கு எடுத்து கூறவுள்ளோம்.

4. மேலும் ரகசிய தடுப்பு முகாம்கள் இன்னும் இருக்கின்றன. அதில் வவுனியா மாவட்டத்தின் யோசப் காம் தமது பிள்ளைகள் இருக்கலாம் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அதில் யார் யார் இருக்கலாம் என்ற அடையாளத்தினை அரசாங்கத்திடம் கோரவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer