Wednesday, March 29, 2017

'மனிதன்' வெற்றியை தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் தனக்கான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். தற்போது கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’, எழில் இயக்கத்தில் ‘சரவணன் இருக்க பயமேன்’, தளபதி பிரபு இயக்கத்தில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என மூன்று படங்களில் பரபரப்பாக நடித்து வரும் நிலையில்... இதற்கு பிறகு  ‘மனிதன்’ படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

‘மனிதன்’ படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் வெளி வந்த ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக் என்பதாலும்... சமீபத்தில் ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் 2ஆம் பாகம் வெளிவந்து, அதுவும் வெற்றிகரமாக ஓடி வருவதாலும்... ‘மனிதன்’ படத்தின் 2ஆம் பாகமும் ரீமேக் தானா என உதயநிதியிடம் கேட்ட போது,  நிச்சயமாக  ரீமேக்காக இல்லாமல் புதிய கதையுடன் இந்த படம் வெளிவரும் என கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer