Sunday, March 26, 2017

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். புதுத் தொழில் தொடங்கும் முய ற்சி வெற்றி அடையும். சிறப்பான நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீ ர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மிதுனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கடகம்: இன்றும் சந்திராஷ் டமம் நடப்பதால் முக் கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் செழிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: சகோதர வகை யில் நன்மை உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அண்டை, அயலாரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியா பாரத்தில் போட்டிகளை சமா ளிப்பீர்கள். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer