Sunday, February 19, 2017

நாடு முழுவதும் ‘முத்தலாக்’ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், வழக்கு தொடர்பாக வழக்குதாரர்கள் எழுப்பியுள்ள 3 அம்சங்களை கவனத்தில் கொண்டனர்.

மேலும், இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது பற்றி அடுத்த மாதம் 30-ந் தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்தனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் தரப்பு கருத்துகளை 15 பக்கங்களுக்கு மிகாமல் அடுத்த விசாரணை நாளுக்குள் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer