Wednesday, February 22, 2017

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 22ந் தேதி காலை 11 மணிக்கு  மாநகர் மா.செ.வும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல் ஏ.வுமான   மாஜி கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஈரோட்டில் ஒரு ரகசியமான இடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்ள நிர்வாகிகளை அழைத்தனர். ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. மொத்தமே 30 பேர் தான் கலந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல் ஏ தென்னரசு முகத்தில் மலர்ச்சியே இல்லாமல் அமர்ந்திருந்தார். அம்மா பிறந்த நாளை நாம் வழக்கம் போல கொண்டாடுவோம் என்று மட்டும் கூறிய எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் ஏப்பா  போட்டோ எடுத்தாச்சா? கூட்டம் முடிந்தது என கூறினார் இருந்த நிர்வாகிகளும். "ஆமாப்பா சீக்கிரம் போங்க போங்க எம்.எல்.ஏ.க்கள் இங்க வந்திருக்காங்கனு மக்களுக்கு தெரிஞ்சிருச்சுனா கூட்டமா வந்திடப் போறாங்க. அப்புறம் வரவேற்பு பலமாகி விடும்" என சிரித்தனர். இரண்டு எம்.எல்.ஏ.க்களும் பயபீதியுடன் வண்டி ஏறி பறந்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer