தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர்ராவ் உத்தரவிட்ட நிலையில், கடந்த 18ந்தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடடைபெற்றது.
சட்டமன்றத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளால் பிரதான எதிர்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டுமென உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். சபை காவலர்களாலும், சபைக்குள் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகளாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களையும் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இதனை கண்டித்து ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ள ஸ்டாலின், இந்த ஜனநாயக விரோத போக்கினை கண்டித்து வரும் 22ந்தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவித்தார். நாளை நடைபெறும் உண்ணாவிரதத்தில் ஸ்டாலின் திருச்சியில் கலந்துக்கொள்கிறார்.
ஓவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு, அந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் தயாராகிவருகின்றனர். திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் திருவண்ணாமலை கோட்டாச்சியர் அலுவலகம் முன் இந்த உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தை தெற்கு மா.செவும், அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ சென்று பார்வையிட்டார். வெயில் அடிக்கும், அதனால் சாமினா பந்தல் முழுக்க போடுங்கள், உண்ணாவிரதத்தில் கலந்துக்கொள்பவர்கள் அமர இருக்கை வசதி செய்ய வேண்டும் என நிர்வாகிகள் கூற, அதனையும் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், திரளாக தொண்டர்களை திரட்டி வந்து அமரவைக்க வேண்டும். யாரும் உண்ணாவிரத பந்தலை விட்டு எழுந்து செல்லக்கூடாது. தொண்டர்கள் டீ கடை பக்கம் கூட ஒதுங்க கூடாது. யாராவது அப்படி சென்றால் மீடியாக்கள் போட்டோ எடுத்து போட்டு பிரச்சாரம் செய்வார்கள்.
காவல்துறை நமக்கு போதிய பாதுகாப்பு வழங்காது. அதனால் கட்சியில் உள்ள தொண்டரணியினர் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும், மற்ற மாவட்டங்களை விட நம் மாவட்டத்தில் அதிகளவு தொண்டர்கள், பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் திரண்டார்கள் என நாம் தலைமைக்கு காட்டுவதோடு, மக்கள் எந்த அளவுக்கு இந்த அரசாங்கத்தின் மீது எதிர்பாக உள்ளார்கள் என்பதை ஆளுநருக்கு காட்ட வேண்டும் என முடிவு எடுத்தனர்.
Home
»
Tamizhagam
»
காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காது; தொண்டரணியினர்தான் நமக்கு பாதுகாப்பு – திமுக உண்ணாவிர ஏற்பாடுகள்
Tuesday, February 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment