Sunday, February 19, 2017

தமிழக சட்டப் பேரவையிலிருந்து தங்களை குண்டுக் கட்டாகத் தூக்கி சட்டையைப் கிழித்தனர். அப்புறமாக சபையிலிருந்து வெளியேற்றியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, சட்டப் பேரவைக்குள் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில், திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பொலிஸாரால் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer