Friday, February 24, 2017

’தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே ...அன்னமே!’ என அரும்பு மீசையில் ரொமான்ஸ் லுக்கில் கொஞ்சிய 'அமராவதி' அஜித் முதல் ட்ரிம் செய்த தாடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ’ஆலுமா...டோலுமா’ என நாக்கைத் துருத்தி அட்ராசிட்டி செய்யும் அஜித் வரை தன் கெட்டப்பை விதவிதமாக மாற்றி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் அஜித்தின் சேஞ்ச் ஓவர் ஆசம்..! ஆசம்!

ரைட்டு. அஜித்தை பசங்க கொண்டாட ஆயிரத்து சொச்சம் ரீசன் இருந்தால் கேர்ள்ஸ் லைக் பண்ண ரெண்டாயிரத்து சொச்சம் ரீசன் இருக்கணுமே!.

அவ்வளவும் சொல்ல முடியாவிட்டாலும் தி பெஸ்ட் காரணங்களை மட்டும் கண்டறியலாம் வாங்க!

* பெண்களுக்கு எப்போதும் ஸ்மார்ட் லுக் பையன்கள் என்றால் ஒரு க்ரஷ் இருக்கும். மீசையை மட்டும் விட்டு வைத்துவிட்டு முகத்தைப் பளபளவென ஷேவ் செய்து பளிங்கு போல வைத்திருப்பது, தலைமுடியை அடிக்கடி சீவி, கலைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது என பெர்சனாலிட்டியை மெயின்டெயின் செய்யும் பையன்களைப் பார்க்கும் போது பிடிக்கத்தானே செய்யும். அதான் அஜித். க்யூட் லுக், கேர்ள்ஸ்க்குப் பிடித்த மேனரிசங்களோடு, எப்போதும் ஸ்மைலியை உதடுகளோடு ஒட்ட வைத்திருக்கும் அஜித்தை ’பிடிக்காது’னு சொல்ல மனசு வருமா என்ன?

*  என்னதான் சமத்து ரோலில் வரும் ஹீரோவை பெண்களுக்குப் பிடிக்கும் என்றாலும் அந்த ஹீரோ நெகட்டிவ் ரோலில் வந்து பயமுறுத்தினால் என்னவாகும்? அந்த நெகட்டிவ் கேரக்டர் அப்படியே மனதில் பதிந்து போகும் அல்லவா? அப்படித்தான் நம்ம அஜித்தும், குட் பாய் கேரக்டரில் நடித்தவர் டக்கென வில்லனாக ’வாலி’ அவதாரம் எடுத்தார். ’அச்சோ...எப்படி இப்படி?’ காது கேட்காம, வாய் பேச முடியாம சிம்ரனை இந்தப் பாடு படுத்துறாரே என நினைக்கும் போது, அது நெகட்டிவ் ரோலாக இருந்தாலுமே 'வாவ்' அஜித் தான்!

* ஹீரோ பிடிக்குமா... சூப்பர் ஹீரோ பிடிக்குமா? சண்டைனு வந்துட்டா அதிரிபுதிரி ஆக்குற சூப்பர் ஹீரோவைப் பிடிக்க கேர்ள்ஸ்க்கு பிரச்னை இருக்குமா என்ன?. ரவுடி கம் ஹீரோ கெட்டப்பில் அமர்க்களப்படுத்தினாலும் மிஸ் பண்ணாமல் ஷாலினியோடு ரொமான்ஸ் கூட்டும் ’தல’யைப் பார்த்தால், அப்படித்தான் சொல்லத் தோன்றும். தல..தல தான்!

* என்னதான் ரொமான்ஸ் பண்ணினாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதுதான் ஹீரோயிசம். அந்த வகையில் தன் இலட்சியம்தான் பெரிது என எண்ணி காதலியை கூட பிரிய நினைக்கும் ஒரு காரணம் போதுமே! என்ன மனுஷன்யா இவரு... ஒரு வாய்ப்புக்காக ஏங்குற காட்சியில அந்த அழுகை, முகபாவம்.. படம் பார்த்துட்டு வந்த பிறகு ’உன்னோட ட்ரீம் என்ன’னு சொல்லுனு தன் காதலர்களிடம் கேட்ட காதலிகள் அதிகம்!

* இந்த ஸ்டைலு இருக்கே ஸ்டைலு ... அது பசங்களுக்கு ரொம்ப முக்கியம். சும்மா நடந்து வரும் போதே கெத்து காட்டணும். ’தல இருக்குறப்ப வால் ஆட முடியாது’. இப்ப இந்த பன்ச் எதுக்குனு கேட்டா, எதுக்கும் இல்லை. சும்மாதான். தல நடந்தா  மட்டும் போதும். எஞ்சாய்!

* ’நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து..
  செய்வேன் அன்பே ஓர் அகராதி..’ -
அக்கம்பக்கம் யாருமில்லாத தனிமையைத் தேடி ஒரு பெண்ணை இப்படி உருகிமருகிப் பாட வைக்க முடியுமென்றால் அதுக்கு முக்கிய காரணம் பேச்சு.. பேச்சு.. பேச்சு. பேச வேண்டிய இடத்தில் பேசியும், மற்ற நேரங்களில் கண்களால் காதல் செய்வதும்தான் அஜித்தின் அசுர பலம். படபடனு பேசுற பசங்களை விட, பேச விட்டு கேக்குற பசங்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ல!

* எல்லாம் ஓகே தான். ரொமான்ஸ், பெர்சனாலிட்டி, பெர்ஃபாமென்ஸ்னு பின்னி எடுக்கும் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பட் லுக் கேர்ள்ஸ்க்கு பிடிக்குமா?!.. ஏன் பிடிக்காது. மேன் ஆஃப் சிம்ளிசிட்டி. ’இதான் நான். என் வயசு 46. தலைமுடி நரைக்கத்தானே செய்யும். எதுக்கு மறைக்கணும்’னு ஓபனாக வந்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் ’உள்ளது உள்ளபடி’ ஹீரோவை பிடிக்காமலா இருக்கும்?!

0 comments :

Post a Comment

 
Toggle Footer