Monday, February 20, 2017

இது நடந்தே தீரும் என்று கோடம்பாக்கத்தில் பலரும் எதிர்பார்த்த விஷயம்தான். ஒரு நாள் ராத்திரி நடந்தேவிட்டது. ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வரும் சிம்பு, படம் துவங்கி ஒரு மாதம் வரைக்கும் ஒரு நாள் தவறாமல் படப்பிடிப்புக்கு வந்தார்.

தமிழ்சினிமாவுலகமே இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு வாயடைத்துப் போனது.

அதற்கப்புறம்தான் குண்டூசி சைசுக்கு கொஞ்சமாக சிக்கல் துவங்கியது. இந்தப்படத்திற்காக பைனான்ஸ் வாங்கிக் கொடுத்த மீடியேட்டர் ஒருவரால் சிம்பு உசுப்பேற்றப்பட்டார்.

அப்புறம் தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் உரசல் வர.... ட்ரிப்பிள் ஏ வுக்கு தீராத குடைச்சல்! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவை அடிக்க அடியாட்களை ஏவி விட்டாராம்.

நல்லவேளை... விபரீதம் ஏதும் நிகழ்வுதற்குள் சிம்பு தப்பித்தார். ஆனால் சீனில் இறங்கிய டி.ஆர், மைக்கேல் ராயப்பனை உண்டு இல்லை என்று ஆக்குவதற்கு முடிவெடுத்துவிட்டார்.

ஆக மொத்தம் எல்லாருமாக சேர்ந்து ட்ரிப்பிள் ஏ வுக்கு பொட்டியடித்து படத்தை மம்மியாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer