தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க. நடத்திய போராட்டம் எந்த அளவில் வெற்றி பெற்று உள்ளது?
பதில்:– நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றி பெற்று இருக்கிறது. தி.மு.க. தான் இதை அறிவித்து இருந்தாலும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இதில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தன.
இதில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:– ஜனாதிபதியிடம் எதை கோரிக்கையாக வைக்க உள்ளீர்கள்?
பதில்:– ஜனாதிபதியிடம் கோரிக்கையை தந்த பின்னர் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, February 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment