Friday, February 24, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு பின்னர் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.யான கருணாஸ் முதல் முறையாக தொகுதிக்கு வந்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்ற கருணாஸ் எம்.எல்.ஏ.க்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாடானை தேவர் சிலை முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர், பசும்பொன் தேசிய கழகத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து கோ‌ஷம் போட்டனர். பின்னர் எம்.எல்.ஏ.யின் காரை முற்றுகையிட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் கருப்புகொடி காட்ட இருப்பதை அறிந்த போலீசார் கருப்புகொடி காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அப்போது அவர்கள், கருணாஸ் எம்.எல்.ஏ. திருவாடானை தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தால் தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer