ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்டவர். அவர்களின் ஆயுத வழிப் போராட்டத்திற்கு உரமானவர்.
அத்தகைய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகர் இன்று இறையடி சேர்ந்தார்.
சுகயீனமுற்ற நிலையில் ஒரு முறை மேடையேறிய அவர் “மேடையில் இறந்தாலும் பரவாயில்லை பாடலே என் உயிர், என் உடலில் சக்தி உள்ளவரை பாடுவேன்” என தெரிவித்து பாடத் தொடங்குகின்றார்.
அத்தகைய உணர்ச்சிகர கலைப் புதல்வனின் கலைத்தாக வரிகளுடன் மனதைக் கவரும் பாடல் அவர் பிரிந்த இன்று கேட்பவர் கண்களையும் மனங்களையும் கலங்க வைக்கும் என்பது நிச்சயம்.
Sunday, February 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment