Monday, February 20, 2017

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படபிடிப்பு ஆரம்பித்து நான்கு நாள் கழித்து தான் விஷால் படபிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். இவர் பிச்சாவரத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள சிதம்பரத்தில் தனியார் ஓட்டலில் தங்கி கொண்டு  காலை 9 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு மேல் தான் வந்து சேருகிறார்.

படப்பிடிப்பு சதுப்பு நிலக்காட்டில் நடப்பதால் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கு தெரியாமல். ஆர்பாட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடந்துகொண்டிருந்தது. இதனையறிந்த நாம் பிச்சாவரத்திற்கு சென்றோம் அங்கிருந்து படபிடிப்பு பகுதிக்கு 3கிமீ தூரம் படகில் தான் செல்லவேண்டும். படகு ஏறுவதற்கு முன் விசால் மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினோம். சிறிது நேரத்தில் லைனில் வந்த விஷால் நீங்க இங்க வரவேண்டாம் நாங்க தண்ணீர் மற்றும் சகதி பகுதியில் படபிடிப்பு நடத்திவருகிறோம். வனத்துறையினரின் கட்டுபாடுகள் உள்ளது. எனவே நான் தங்கி இருக்கும் இடத்திலே பேசலாம் என்றார் பின்னர் சிதம்பரம் வந்தடைந்தோம்.

பின்னர் இரவு 8மணிக்கு ஒரு போன் வந்தது சார் இப்பதான் அங்கிருந்து வந்தார். நீங்க எங்க இருக்கீங்க என  அவரது நண்பரும் நடிகருமான சௌந்தர்ராஜன் தொலைபேசியில் கேட்டார். இதனை தொடர்ந்து விஷால் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.

நாம் வந்த தகவலை அவரிடத்தில் கூறியுடன் உடனே அறையை விட்டு வெளியே வந்தார். அவருக்கு கண்கள் சிவந்து முகம் கருவடைந்து வாடி இருந்தது. அவரை பார்த்தவுடன் இவரா விஷால் என்ற நினைப்பிலே அறிமுகமானோம். அவரோ ஒரு விவசாயி காலையில் வயலுக்கு போயிட்டு மாலையில் எப்படி வருவாறோ அதே போல் எளிமையாக இருந்தார்.

அவர் நம்மிடம் நடிகர் என்பதை மறந்து விவசாயி, சமூக ஆர்வலர் போல் பேசுகையில், இப்ப நடக்கிற கூத்தையெல்லாம் பார்க்கும் போது டிவியை பாக்கவே வெறுப்பாக உள்ளது. யார் வந்தாலும் பிரச்சனையில்லை. வந்தவர்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு. விவசாயிகளின் கடன்களையும், ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வாங்கிய கடன்களை ரத்துசெய்யவேண்டும். விவசாயிகளின் சாவு பதிவு பெற்றதை விட பதிவு இல்லாமல் அதிகம் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் சீமைகருவேலமரங்களை முற்றிலும் அழிக்க உறுதுணையாக இருப்பேன். பல இடங்களில் நண்பர்கள்,ரசிகர்கள் உதவியுடன் அழித்து வருகிறேன்.

சிதம்பரம் பகுதியில் இதனை அழிக்க விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களை கொணடு துவக்க ஏற்பாடு செய்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்றுவருகிறது. இதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவந்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.

நடிகை பாவனா சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பாவனா போல் பல பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் வெளியில் தெரிவது இல்லை. அப்படியே தெரிந்தாலும் சரியான நடவடிக்கை இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் குட் தட்சு, பேட் தட்சு சொல்லி வளர்க்கவேண்டும்,அரசும் மாணவர்களுக்கும் செக்ஸ் கல்வியை பாடமாக கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்தனும்.

தமிழகத்தில் உள்ள பல இடங்களில் கேடி, ரவுடி என முத்திரை குத்தப்பட்ட இடங்களில் உள்ள இளைஞர்களை அழைத்து அவர்களை முழுவதுமாக ஸ்போர்ட்ஸில் ஈடுபடுத்தி ஒலிம்பிக் வரை அவர்களை கொண்டு வருகிறோம். யாரும் ஒன்னு சேர்ந்து கேட்கமாட்டாங்க என்ற நினைத்த காலம் மாறியுள்ளது. தமிழகத்தில் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் ஒரு பைசா காசு வாங்காமல் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் சிலர் காசு வாங்கியதால் இப்போது நடக்கும் சம்பவத்திற்கு குற்ற உணர்ச்சியுடன் கூனிகுறுகி இருக்கிறார்கள்.

விவசாயிகளின் வாழ்வில் உள்ள குறைபாடுகளை உணர்வு பூர்வமாக அறிய விரைவில் தஞ்சையில் 5 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து விவசாயிகளின் கடன்களுக்கு முற்றுபுள்ளி வைப்பேன், தற்கொலைகளை விடபோறது இல்லை என அழுத்தமாக பதிவு செய்தார். என்னை கல்லூரி,கடைதிறப்பு என பல இடங்களுக்கு போய் திறந்து வைத்து பேசியுள்ளேன் அப்போது அவர்களிடத்தில் காசு கேட்பது இல்லை. இப்போதெல்லாம் அவர்களிடத்தில் வெட்கபடாமல் காசு கேட்டுவாங்கி அந்த பகுதியில் நலிவடைந்த விவசாயிகள், ஏழைமாணவர்களுக்கு அதே மேடையில் பிரித்துகொடுத்து வருகிறேன் என்று பேசிகொண்டு இருந்த போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெயர்கொண்ட ஒரு பெரிய லிஸ்ட்டை எடுத்து காட்டி இவர்கள் இலங்கை அகதி முகாமில் உள்ள குழந்தைகள் இவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். அதே போல் இந்த ஆண்டு ரூ2லட்சத்தை அனைவருக்கும் இங்க வரவழைத்து பிரித்து கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றார்.

காளிதாஸ்

0 comments :

Post a Comment

 
Toggle Footer