Friday, February 17, 2017

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதில், பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை என்று தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை முறையாக பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் கூறி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் 30ஆம் தேதிக்குள் புதிய அரசாணை  வெளியிட்டு  உள்ளாட்சித் தேர் தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தனி நீதிபதி உத்தரவை  எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.

 இந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஐரான வழக்கறிஞர் வழக்கு தொடர்பான  முறையாக ஆவணங்களை நீதிபதி முன்பு  சமர்பிக்கவில்லை.

அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைத்திடம், ஜெராக்ஸ் மிஷின் இல்லையா? ஆவணங்களை ஒவ்வொன்றாக தருகிறீர்களே. எத்தனை முறை தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் அளிப்பது... என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer