Saturday, February 18, 2017

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார். அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் இவரும் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று மாலை ரெசார்ட்டில் இருந்து வெளியேறினார். இன்று காலை கோவை பெத்தநாயக்கன்பாளையத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா தலைமையிலான அதிமுகவை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை. அதிமுகவின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அருண்குமாரை அப்பகுதி மக்கள் மற்றும் கட்சியினர், அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். சால்வை அணிவித்தனர், மாலை அணிவித்தனர். சிலர் இனிப்புகள் கொடுத்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer