Sunday, February 19, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யும் நோக்கில் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 340 போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹெலியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த விபரங்கள் மனித உரிமைப் பேரவையிடமும் ஒப்படைக்கப்பட உள்ளது. சரத் வீரசேகரவுடன் இலங்கையின் இரண்டு சிரேஸ்ட சட்டத்தரணிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னதாக எந்தவொரு அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான போர்க்குற்றச் செயல் ஆதாரங்களைளோ தகவல்களையோ வெளியிட்டதில்லை என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer