பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் ராஜூக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று அமைச்சர்களும் சசிகலாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்புகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, அதிமுக பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சசிகலாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்புகின்றனர்.
தண்டனை கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சந்திக்கலாம் என்பதால் சிறைத்துறை அதிகாரிகள் இன்று அனுமதி மறுத்துள்ளனர்.
Tuesday, February 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment