Wednesday, February 22, 2017

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஆறுமுக இன்று உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). நகர அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்.

கடந்த 16 -ம் தேதி மாலை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார். இதை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டார். மேலும் அவர் அங்கிருந்த டி.வி.யையும் அடித்து நொறுக்கினார். பின்னர் அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், வலியால் ஆறுமுகம் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ஆறுமுகத்தின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.  இருப்பினும் அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகத்தை உடனடியாக சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer