Thursday, February 16, 2017

தமிழகத்தின் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க வை நிர்வகிக்கும் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்படும் அதேவேளை, இன்னும் ஆறு மாதங்களில் திவாகரனை முதலமைச்சாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த திட்டங்களை வகுத்து கொடுத்த பின்னரே போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா சிறைக்கு சென்றுள்ளதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், சட்டசபை குழு தலைவராகவும் தெரிவு செய்யப்பட்ட சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்ற இருந்தார். எனினும், கடந்த 7ஆம் திகதி யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கினார்.

இது ஒரு புறமிருக்க சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பும் வெளியாகவிருந்தது. ஒரு வேளை தீர்ப்பு தமக்கு பாதகமாக அமைந்தால் என்னசெய்வதென கடந்த ஒருவாரகாலமாக சசிகலா பல திட்டங்களை வகுத்துள்ளார்.

அந்தவகையில், முதலமைச்சர் பதவிக்கு தினகரன் அல்லது திவாகரனை நியமிக்க ஆலோசித்த போதிலும், மக்களின் எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும் என அந்த யோசனை கைவிப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, கடந்த செவ்வாய் கிழமை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, குடும்ப அளவில் ஆலோசிக்கப்பட்டு தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலராக நியமித்து கட்சி பணியை கட்டுக்குள் வைப்பது என்றும் முடிவானது.

மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதற்கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கவும் முடிவானது.

பின்னர் அரசின் பாதுகாப்புடன் திவாகரனை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட செய்து அடுத்த ஆறு மாதத்துக்குள் முதல்வராக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer