கென்யாவின் தேசியப் பூங்காவில் உள்ள யானைகளை, சிறிய ரக விமானங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 48 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சாவோ ((tsavo)) தேசியப் பூங்கா, கென்யாவின் முக்கியமான யானைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. இங்கு உயிர் வாழும் யானைகள் மற்றும் மிகப்பெரிய உயிரினங்களை கணக்கெடுப்பதற்கான
ஆண்டு ஆய்வு தொடங்கியுள்ளது. இதற்காக 8 சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு மணிநேரத்தில் 120 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள யானைகள் மற்றும் இதர விலங்குகளை கணக்கிட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கிடும் பணியில் குழப்பத்தை தவிர்க்க ஜி.பி.எஸ். கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
Friday, February 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment