Thursday, February 16, 2017

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பதவியேற்றுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கிடையே பன்னீர் செல்வத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். வரும் சனிக்கிழமை சட்டசபை கூடும் நிலையில் இந்த சந்திப்பானது முக்கியமானதாக கருத்தப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer