Wednesday, February 22, 2017

விருதுநகரை அடுத்துள்ள ஆமத்தூரில் AAA பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களை அழைத்து வருவதற்கு குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்தப் பேருந்துகளில் ஒன்று, இன்றைய தினம் சாலையில் சென்ற போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. சர்வீஸுக்காக சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை கிளம்பியதாகவும், இதைக் கவனித்துவிட்ட டிரைவர். பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, சரிபண்ண முயற்சித்ததாகவும், அப்போது புகை அதிகமாகி, பேருந்து முழுவதுமாக எரிந்து விட்டதாகவும், கல்லூரி தரப்பில் கூறுகின்றனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer