Friday, February 24, 2017

நாட்டு நடப்பை கூர்ந்து கவனித்து வரும் நடிகைகளில் மிக மிக முக்கியமானவர் நயன்தாராதான். சமீபகாலமாக தமிழ்நாடு தள்ளாட்டத்தில் தள்ளப்பட்டதை சற்று உன்னிப்பாக கவனித்து வந்தவர், நிமிஷத்துக்கு நிமிஷம் அது பற்றிய தகவல்களை நாலாபுறத்திலும் விவாதித்தும் அறிந்து கொண்டாராம்.

ஏங்க இந்த விஷயத்துல இவ்வளவு இன்ட்ரஸ்ட் காட்றீங்க என்று கேட்டவர்களுக்கு ஒரு சின்ன புன்னகையை பதிலாக தந்தவர், “தமிழ்நாட்ல நடக்கிற பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து மக்கள் நார்மல் வாழ்க்கைக்கு வந்தால்தான் தியேட்டர்ல கூட்டம் வரும்.

அதுவரைக்கும் எல்லாருக்கும் கஷ்டம்” என்றதுதான் சிறப்பு. ஒரு முக்கிய குறிப்பு என்ன தெரியுமா? தமிழ்சினிமாவில் புழங்குகிற பல கோடி ரூபாய் பணம், நயன்தாராவின் பணம். படம் ஓடினால்தானே அது பிரச்சனையில்லாமல் திரும்பி வரும்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer