Monday, February 20, 2017

'தாரை தப்பட்டை' படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா 'குற்ற பரம்பரை' கதையை படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் பாலா விற்கும், பாரதிராஜாவிற்கும் முட்டல் மோதல் ஏற்படவே... 'சாட்டை' யுவன் மற்றும் புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்தார். பின்னர் அதையும் கிடப்பில் போட்ட அவர், வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் . இந்த படத்தில் விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி என மிகப்பெரிய நடிகர்கள்... நடிக்க இருப்பதாக  கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த படத்தையும் தற்காலிகமாக அவர் நிறுத்தி வைத்துள்ளார்.

இதனிடையே நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டென்மென்ட் நிறுவன தயாரிப்பில், தற்போது  பாலா இயக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படதிற்கு , ஒரு பெண் கதாபாத்திரத்தை முன்னிலைபடுத்தி கதை களம் அமைக்கபட்டுள்ளதாகவும். அந்த கதாபாத்திரதில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும்  தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் விஜய் படத்திலிருந்து விலகிய ஜோதிகா... இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து வரும் நிலையில், .இதற்கு  பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer