பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தபட்டதன் பின்னனியில், ஒரு நடிகர் இருப்பதாக கேரளாவில் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய, பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனி என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்தான் இதில் முக்கிய குற்றவாளி எனத் தெரிகிறது. இந்நிலையில்,
ரியல் எஸ்டேட் தொழில் விவகாரத்தில், ஒரு பிரபல மலையாள நடிகருக்கும், நடிகை பாவனாவிற்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாகவும், எனவே, பாவனாவை அசிங்கப்படுத்துவதற்காக அந்த நடிகர் சொல்லித்தான் பல்சர் சுனி, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் மலையால திரையுலகில் பேசப்படுகிறது. அந்த நடிகர் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் முக்கிய மற்றும் அதிகாரத்தில் இருப்பவர் எனக் கூறப்படுகிறது.
Tuesday, February 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment