கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (பெப் 27) முன்னதாக விடுவிப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் பிராந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பரவிப்பாஞ்சன் மக்கள் தொடர் போராட்டமொன்றை நடத்தி வந்த பின்னணியிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Home
»
Sri Lanka
»
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!
Friday, February 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment