Friday, February 24, 2017

திண்டுக்கல்லில் படுகொலையான பசுபதிபாண்டியனின் நெருக்கமான ஆதரவாளரும் அவரின் சூத்ரதாரியுமான புல்லாவெளி சிங்காரம் இன்று காலை 11.30 மணியாளவில் தூத்துக்குடி போலீசாரால் தூத்துக்குடி இரண்டாவது அடிஷனல் நீதிமன்றத்திற்கு அவன் மீதான முறப்பநாடு பி.எஸ். 307 வழக்கில் ஆஐர்படுத்துவதற்காக பாளை ஜெயிலிலிருந்து தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களால் சுமோவில் கொண்டு வரப்பட்டான். போலீஸ் வாகனம் பாளை தாண்டி கே.டி.சி. நகர் செக் போஸ்ட் அருகில் வந்த போது ஸ்பீடு பிரேக்கரைக் கடப்பதற்கு மெதுவாக வந்தது.

அப்போது திடீரேன எதிர்பாராத விதமாக சுமோ மற்றும் இண்டிகா இரண்டு வாகனத்தில் 13 பேர்களடங்கி கும்பல் ஒன்று வந்தது. நொடிக்கும் குறைவான நேரத்தில் போலீஸ் வாகனம் மீது இண்டிகா மோத நிலை குலைந்த போலீசார் கீழே இறங்கி அவர்களை எதிர் கொள்ள முயன்ற போது பின்னால் வந்த வாகனத்திலிருந்து பாய்ந்து வந்தவர்கள் போலீஸ் வாகனம் மற்றும் போலீசார் மீது மிளகாய் பொடி தண்ணீர் பாட்டல் மற்றும் மிளகாய் பொடியைத் தூவி உள்ளே இருந்த சிங்காரத்தை வெளியே இழுத்துப் போட்டு மூர்க்கத்தனமாக வெட்டியதோடு அவரது கழுத்தையும் அறுத்துப் படுகொலை செய்தது.

ரத்தச் சகதியில் புரண்ட சிங்காரத்தின் மூச்சு சம்பவ இடத்திலேயே அடங்கியது. சிங்காரம் படுகொலைத் தகவலால் பதற்றம் பரவிய நிலையில் ஸ்பாட்டுக்கு வந்த நெல்லை மாநகர கமிசனர் திருஞானம் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததோடு குற்றவாளிகளைத் தேடுவதற்கு தீவர முயற்சிகளை மேற் கொண்டார் இதனிடையே போலீசார் அவசர அவசரமாக சிங்காரத்தை அருகில் உள்ள பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவரது உயிர் பிரிந்தது பின்னர் தான் தெரியவந்திருக்கிறது.

பசுபதிபாண்டியனின் தீவர ஆதரவாளரான சிங்காரம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள மூலக்கரைப் பக்கமிருக்கும் புல்லாவெளியைச் சேர்ந்தவர். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் தாத்தா சிவசுப்பிரமணிய நாடார், சித்தப்பா அசுவதி நாடார் ஆகியோர் 1992ன் போது, மூலக்கரையிலிருக்கும் தங்களின் உப்பு வயலுக்கு கடல் தண்ணீரை உப்பு தயாரிப்பிற்காகக் கொண்டு செல்லும் போது வழியோர வயலைச் சேர்ந்தவர்கள் மறுக்க, தகராறு மூண்டது அப்போது அவர்களுக்கு ஆதரவாக பசுபதிபாண்டியன், பண்ணையார்களை எதிர்த்தார்.

அதில் பசுபதியாண்டியனோடு இணைந்து செயல்பட்டவர் புல்லாவெளி சிங்காரம். அப்போதைய பகை காரணமாக அசுவதி பண்யைாரும் அவரது தந்தை சிவசுப்பிரணிய நாடாரும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிங்காரம் கைது செய்யப்பட்டார். பின்னர் பசுபதி மற்றும் பண்ணையார் தரப்பிற்கும் ஏற்பட்ட பகை காரணமாக நடந்த போதலில் இரண்டு தரப்பிலும் பலர் கொலையானார்கள். இது தொடர்பான வழக்குகளோடு 2009ல் நெல்லையிலுள்ள சுத்தமல்லிப் பக்கம் சுப்பையாவின் தரப்புகளால் சுத்தமல்லி மதன், மணிகண்டன் மற்றொரு மணிகண்டன் என மூன்று பேர் கொலையுண்டனர் அந்த வழக்கும் இவன் மீது உள்ளது.

அதோடு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையிலிருப்பதால் பல வருடங்களான ஜெயிலில் இருந்து வருபவர் சிங்காரம். இந்தச் சூழ் நிலையில் வழக்கின் பொருட்டு ஆஐர்படுத்துவதற்காக அவரை நீதி மன்றம் கொண்டு செல்வதை வேவு பார்த்த கும்பல் பழிதீர்த்துள்ளது என்கிறார்கள். கமிஷனரால் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தப்பிய மர்மகும்பலையும் வாகனங்களையும் தேடிவருகினறனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer