Wednesday, February 22, 2017

தமிழில் தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. இவர் கடந்த வெள்ளியன்று Angamaly பகுதியில் ஷூட்டிங் முடித்து திரும்பியபோது இவருடைய காரை வழிமறித்து சிலர் இவரை கடத்தி சென்றுள்ளனர்.

கடத்தியவர்களில் ஒருவர் இவருடைய முன்னாள் டிரைவர் சுனில் என்பதும் அவருடைய வழிநடத்திலின் படியே பாவனா கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. உடனடியாக பாவனா தரப்பில் தன்னை சிலர் கடத்தி மானபங்கப்படுதியதாக புகார் கொடுக்கப்பட்டது.

அதற்குமுன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களிடம் தப்பிய பாவனா, நேராக அருகில் இருந்த நடிகர் லால் வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி கதறி அழுதிருக்கிறார். பின்னர் பாவனாவின் வருங்கால கணவர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வந்த பிறகுதான் பாவனாவுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்ததாம். இந்த விஷயத்தில் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் ஓயக்கூடாது என சொல்லியதே அவர்தானாம். மேலும் போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்க பாவனாவை கட்டாயப்படுத்தியதும் அவர்தானாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer