Tuesday, February 28, 2017

ஆழமான பார்வை, அமைதியான பேச்சு, அருகே இருக்கும் டேபிளோ, இரும்பு வாளியோ எடுத்து உறுதியான அடி...இது தான் விஜய் ஆண்டனியோட ஸ்டைல். இந்த ஸ்டைல் நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு. இதே ஸ்டைல்-ல ஆனா இதுவரை அவர் பண்ணாத கதைக்களத்துல ஒரு படம் தான் எமன். விஜய் ஆன்டனி க்கு மிகப் பொருத்தமா இருக்குற இந்த ஸ்டைல உருவாக்குனதுல முக்கிய பங்கு கண்டிப்பா அவரோட முதல் படமான 'நான்' இயக்குன ஜீவா ஷங்கருக்கு இருக்கும். அவரோட மீண்டும் சேர்ந்துருக்கனால, இயல்பாவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கு நமக்கு.

வழக்கமான விஜய் ஆண்டனி இதுல இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா டான்ஸ், ரொமான்ஸ், பில்ட்-அப் பாட்டு என எல்லாமே ட்ரை பண்ணிருக்காரு. எப்படியும் அடுத்த படங்கள்ல நல்லா பண்ணிருவாரு. ஹீரோயின் கிட்ட ஜோக் அடிப்பதில் இருந்து, தன் வீட்டில் வெடிகுண்டு போட்ட விஷயம் வரைக்கும் எல்லா விஷயத்தையும் ஒரே தொனில சொல்றது கொஞ்சம் நெருடலா இருக்கு. அண்டர் ப்ளே கொஞ்சம் ஓவர் ப்ளே ஆகுது. தியாகராஜன் முக்கிய வில்லனா நடிச்சிருக்காரு. அமைதியான அழுத்தமான வில்லன். மினிஸ்டரா வர்றவரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு.

அரசியல் விளையாட்டுத் தான் இந்த படம். யாரோ ஒருத்தர் துவங்குற ஒரு பொலிடிக்கல் கேம்ல தற்செயலா விஜய் ஆண்டனி மாட்டிக்க, அதுக்குள்ள போய், எப்படி விளையாட்டை தன் பக்கம் கொண்டு வந்து ஜெயிக்கிறார் என்பது தான் கதை. சுவாரஸ்யமான ஆன கதைக்களம் தான். சுவாரஸ்யமா தொடங்கி விறு விறுன்னு போற படம், கொஞ்ச நேரத்துல அரசியல், துரோகம், சூழ்ச்சி இப்பிடி திரும்ப திரும்ப வர, கொஞ்சம் க்ரிப் மிஸ் ஆகுது. அரசியல் சதுரங்கம் தான் கதை என்று வந்து, அதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போக முயற்சி செய்திருந்தாலும், ஒரு கேம்-ல எல்லா ரௌண்டுலயும் ஒருத்தரே ஜெயிச்சு கிட்டே இருக்கறதுனால அடுத்தடுத்த ரௌண்டுகள்ல த்ரில் இல்லாம போகுது. மைண்ட் கேம் என்றாலும், கொல்ல ஆள் அனுப்பினாலும், அவுங்கள ஆரம்பத்துல இருந்தே ஈஸியா முறியடிக்கிறார் விஜய் ஆண்டனி . அதுனால இரண்டாம் பாதியில அவருக்கு என்ன பிரச்னைனாலும் அவரு தான் ஜெயிப்பார் என்ற அசட்டை பாக்குறவங்களுக்கு வந்துருது. இந்த மாதிரி ஒரு கமர்ஷியல் படத்துல அங்கங்க கிரிப் வந்து அப்டியே க்ளைமாக்ஸ் நோக்கி எடுத்திட்டு போற முக்கியமான திருப்பங்கல் வந்தா நல்லா இருக்கும்.

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிய சுத்தமா டம்மி பண்ணிட்டாரு. 'என் மேல கை வச்சா காலி' பாட்டு மட்டும் தான் நம்ம மனசு-ல நிக்குது. அதுவும் ஏன்னா, படம் முழுவதும் அதே இசை வித விதமா வருது. பின்னணி இசை ரொம்ப முக்கியம் அமைச்சரே... கேமரா இருட்டயும், இறுக்கத்தையும் பாக்குறவங்கள அழகா இருக்கு.

தமிழ்-ல பல அரசியல் பேசும் படங்கள் வந்திருக்கு. சில படங்கள் வெற்றி பெற்றிருக்கு. வெற்றி பெற்ற படங்களில் முக்கிய பங்கு, வசனத்துக்கும் இருக்கும். சமகால அரசியல் பேசும் வசனங்கள் நிறைய பயன்படுத்தி இருக்காங்க, அது நல்லாவும் இருக்கு. இன்னும் கூர்மையான விஷயங்கள், உண்மைக்கு நெருக்கமான காட்சிகள் இருந்தால் ரசிகர்களின் வரவேற்பு நல்லா இருந்திருக்கும். உதரணமா, படத்தின் இரண்டாம் பாதியில் தியேட்டர் ஒரு மாதிரி அமைதியா இருந்தது. கிளைமாக்ஸ் கிட்ட வந்து நடக்கிற ஒரு ட்விஸ்ட்-ல விஜய் ஆண்டனி கிட்ட வேலை பாக்குறவரு, தியாகராஜன் கிட்ட சொல்ற ஒரு வசனத்துக்கு தியேட்டரே விசில் அடிச்சுது. அந்த மாதிரி கூர்மையா இன்னும் சில வசனங்கள் இருந்திருக்கலாம்.

கமர்ஷியல் என்றாலும், இஷ்டத்துக்கு இல்லாமல் தரத்துடன், சுமாரான ஒரு படம். தன் படத்துக்கு வருபவர்கள் வருத்தப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை தக்க வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால், இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி இருந்தால், வந்தவர்கள் ரொம்ப சந்தோஷமா போயிருப்பார்கள்.

எமன் - உயிருக்கு ஆபத்தில்ல... நம்பி போகலாம்

0 comments :

Post a Comment

 
Toggle Footer