Friday, February 24, 2017

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் ஹீரோக்கள் பலரும் சூர்யாவை ‘சூப்பர் ஸ்டார் சூர்யா’ என்றே அழைக்கிறார்கள். (ஒருவேளை அப்படி சொல்லி வச்சுருப்பாங்களே?) இருந்தாலும் அப்படியெல்லாம் அழைக்க அழைக்க அவர்களுக்கு நல்லது செய்து வருகிறார் சூர்யா.

இங்கு அவர்களின் படங்களுக்கு தியேட்டர் போட்டு தருவது. அல்லது மேற்படி நடிகர்களின் டப்பிங் படங்களுக்கு இங்கு வழியேற்படுத்திக் கொடுப்பது என்று.

சமீபத்தில் தெலுங்கு ஹீரோவான ராணாவும் இப்படியே சூர்யாவை சூப்பர் ஸ்டார் என்று அழைக்க... அவருக்கும் ஒரு பேவர் போனது.

எப்படி? ராணா நடிக்கும் ‘காஸி’ படத்தை பற்றிய ஒரு முன்னோட்டத்தை தமிழில் பேசித்தர வேண்டும். இந்தியில் அமிதாப்பும், தெலுங்கில் சிரஞ்சீவியும் இந்த முன்னோட்டத்தை வழங்கினார்களாம்.

தமிழில் வழங்கியவர் சூர்யா. அப்படின்னா அகில உலக சூப்பர் ஸ்டார்னு கூட சொல்லுங்க. தப்பில்ல....

0 comments :

Post a Comment

 
Toggle Footer