Saturday, February 25, 2017

இன்று தனியர் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

செயற்கையாக ஒரு அரசியல் சூழல் ஏற்படுத்தபட்டு உள்ளது. கட்சியிலும் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எண்ணத்திற்கு மாற்றாக ஒரு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.  உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் நீதிகேட்கும் பயணம் தொடங்கும்.

மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி வருகின்ற தேர்தலில் வெளிப்படும். யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதல்வர் இயங்குகிறார் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும்.

சொகுசு விடுதியில் இருந்த போது என்னிடம் பல எம்.எல் ஏக்கள் எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களை வெளியே விடாமல் அப்படியே அழைத்து வந்து நம்பிகை தீர்மானத்தில் கலந்து கொள்ள வைத்து உள்ளார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலவராக பொறுப்பு ஏற்றவுடன் அமைச்சர்கள் மூலம்,  தலைமை கழக நிர்வாகிகள், பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆகியோர் மூலம் எனக்கு கடுமையான இடையூறு கொடுத்தார்கள். நானாகபதவி விலக  வேண்டுமென அவர்கள் எண்ணினார்கள்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது.

சிகிச்சை பற்றி என்னிடம் கூட வெளிப்படையாக யாரும் கூறவில்லை.

அதற்காக தான் நீதி விசாரணை நடத்த வேண்டும் என நான் கூறினோம். ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சிகிச்சையளிக்க வேண்டும் என நான் கூறியும் யாரும் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. விசாரணை நடத்தினால் அது எலோருக்கும் தான் அல்லது.

எந்த இயக்கத்துடனும் சேர்ந்து செயல்பட வில்லை. அவ்வாறு செயல்பட்டு கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன்.

கமலின் கருத்து தனிபட்ட கருத்து. நடிகர்கள் மக்களின் மன நிலைஅயை தெரிந்து கொள்ளும் இடத்தில்  உள்ளனர். அதை வெளிப்படுத்தி உள்ளார்.

 இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer