Monday, February 20, 2017

அதிர்ஷ்டம் முற்றிலும் ஓடிப் போய்விடவில்லை. கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது என்பதை இப்போது உணர்ந்திருப்பார் லட்சுமிமேனன்.

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைய ஒரு வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. ஐயகோ... அந்த நேரத்தில் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு.

கட்டாய ரெஸ்ட் என்று வேறு வழியில்லாமல் அப்படத்தை கைவிட வேண்டியதாயிற்று.

ஒரு மாசம் டைம் கொடுங்க என்று கேட்டவருக்கு கீழே விழுந்த சென்ட்டிமென்ட்டை காரணம் காட்டி நோ சொல்லப்பட்டதாம்.

அதனால் என்ன? பிரபுதேவாவுக்கு ஜோடி போடும் வாய்ப்பு பின்னாலேயே வந்துவிட்டது.

இப்போதெல்லாம் பிரபுதேவாவின் சாய்ஸ் தமன்னாதான். தன் சிபாரிசில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கிவிட்டார் தமன்னாவுக்கு.

மூன்றாவது முறையாகவும் இதே வேலையாக இருந்தால், முத்திரை குத்திவிடுவார்கள் என்பதற்காகதான் லட்சுமிக்கு ஓ.கே சொன்னாராம் மாஸ்டர்.

லட்சுமி பிரபுதேவா இணையும் படத்திற்கு எங் மங் சங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வரிவிலக்குக்கு அப்ளை பண்ணும்போது ஐயோ சாமீய் என்று அலறிபடியே பெயர் மாற்றுவார்கள். அது தனி காமெடி!

0 comments :

Post a Comment

 
Toggle Footer