நாளை அரசியல்வாதி ஒருவர் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட உள்ளேன் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி இன்று வெளியிட்டுள்ள ஒரு தகவல் அரசியல்வாதிகள் நடுவே பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அந்த டிவிட்டில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: நான் நாளை ஒரு விஷயத்தை வெளியே சொல்ல உள்ளேன். அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதற்கு டிவிட்டரிலேயே பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அது காங்கிரசை சேர்ந்தவரா, அதிமுகவை சேர்ந்தவரா, திமுகவை சேர்ந்தவரா என்றெல்லாம் அவரிடமே கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் பதில் ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியன் சுவாமி பெரிதாக எதையாவது சொல்லப்போகிறாரா, அல்லது அவர் மிரட்டல் புஸ்வானமாகுமா என்பது நாளை தெரியும்.
No comments:
Post a Comment