Sunday, February 19, 2017

'ரெமோ' வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் நவம்பர் மாதம் துவங்கிய படப்பிடிப்பு இன்று வரை நடந்து வரும் நிலையில், நேற்றுவரை இந்த படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், இன்று  சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் (பிப்ரவரி 17) என்பதால் இன்று மதியம் 12.30 மணியளவில் படத்தின் தலைப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம் என நேற்றே  படக்குழு அறிவித்திருந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘வேலைக்காரன்’ படத்தின் தலைப்பையே  தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில். தற்போது அந்த செய்தி உண்மையாகி உள்ளது.

ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏஎம் ஸ்டியோஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஆகஸ்ட் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது ‘வேலைக்காரன்’ என படத்தின் பெயர் உறுதியானதில்   சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer