Tuesday, February 21, 2017

மன்னன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று டைரக்டர் பி.வாசு நினைத்து, அதில் ஹீரோவாக நடிக்க வைக்க லாரன்சையும் முடிவு செய்துவிட்டார். அந்த நேரத்தில் கருத்து தெரிவித்த சிவாஜி புரடக்ஷன் முதலாளியும் நடிகருமான பிரபு.

“இல்ல.... மன்னன் ரீமேக்கில் விக்ரம் பிரபு நடிக்கப் போகிறார்” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இருந்தாலும் லாரன்ஸ்சுக்கு இருக்கிற பல கோடி பிசினஸ் மின்னல் படக் படக்கென கண்ணில் வந்து அடித்ததாம் மற்றொரு முதலாளியான ராம்குமாருக்கு.

இதே புராஜக்டை ட்ரை பண்ணி பார்ப்போம் என்று நினைத்து பேச்சு வார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறாராம்.

இதில் ஒரு சீனிலாவது ரஜினியை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் முதல் ஆசையாக இருக்கிறதாம் அனைவருக்கும்.

இப்படியே நல்ல நல்ல சுவத்துக்கெல்லாம் சுண்ணாம்பு தடவிகிட்டேயிருங்க. ரசிகர்கள் சேர்ந்து ரீமேக்குங்கிற கலாச்சாரத்துக்கே லாடம் கட்டிடுவாங்க!

0 comments :

Post a Comment

 
Toggle Footer