Sunday, February 19, 2017

கேரளாவில் நடிகை பாவனா கடத்தி செல்லப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டுள்ளதாகம், அதிலிருந்து அவர் தப்பி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்று இரவு அவர் வீட்டின் அருகே, ஒரு காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார் எனவும், அந்த கார் எர்ணாகுளம், ஆலுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்து பாவனா தப்பி வந்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அவரிடம் இதற்கு முன் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer