Saturday, February 18, 2017

சட்டசபையில் நடைபெற்ற அமளியை தொடர்ந்து கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் தனபால் சபையை 1 மணிவரை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து அவசரமாக ஆயிரம் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். ஏற்கனவே ஆயிரம் போலீசார் இருந்ததால் சட்டசபை வளாகத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 200 பேர் கொண்ட அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer