Saturday, February 25, 2017

பாடகியும் நடிகையுமான சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பல ட்வீட்கள் திரை பிரபலங்களை தாக்கி பகிரப்பட்டு வந்தது. நான் என் கணவர் நடிகர் கார்த்திக்கை விவாகரத்து செய்யபோகிறேன், இதற்கு தனஷ்தான் காரணம் என்றும் தனுஷால்தான் என் கை இப்படியானது என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பின்னர் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார்.

ஆனால் உண்மை அது இல்லையாம். தனுஷும் சுசித்ராவும் ‘பார்ட்டி’ நண்பர்கள். அன்றிரவு நன்றாக குடித்துவிட்டு இருவரும் பாரில் இருந்து வெளியேறியுள்ளனர். அப்போது தனுஷ், சுசித்ராவின் கையைப்பிடித்து இழுத்துள்ளார். மேலும் அவரை தரக்குறைவாக திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுசித்ரா, போதையில் உடனே டிவிட்டரில் இதுபோன்று ட்வீட் போட்டுள்ளார். பின்னர் தனுஷின் வட்டாரம் சுசித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன்பிறகே சமாதானமாகி தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறியுள்ளாராம். இப்படியெல்லாம் கோடம்பாக்கத்தில் ஒரு கதை உலா வருகிறது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. அதுதான் திரையுலகம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer