Monday, February 20, 2017

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு புதிதாக எந்த ஒரு படத்தையும் தயாரிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தது. ஒரு காலத்தில் ரஜினி, கமல் என நட்சத்திர நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த  இந்நிறுவனம் 'சந்திரமுகி' படத்திற்கு பிறகு  கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த  'அசல்' படத்தை தயாரித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான  நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த வருடம் விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான 'தெறி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணியை இணைத்து புதிய படம் தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது ஏதோ சில காரணங்களால் அந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், தற்போது மீண்டும்  விஜய், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகிய மூன்று நடிகர்களிடமும் சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய் படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில்,  விஜய்சேதுபதியின்  படத்தை  'சேதுபதி'யை இயக்கிய அருண்குமார் இயக்க உள்ளதாகவும் . ராகவா லாரன்ஸ் உடன் 'சந்திரமுகி 2' படத்திற்காக  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer