கடந்த காலங்களில் தமிழ் திரையுலகிற்கு பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் ஆகிய இருவருக்கும் உண்டு. இன்றும் இத்தகைய பெருமைக்குரிய செயலை தொடர்ந்து செய்து வருபவர் இயக்குனர் சசிகுமார் என்று கூறலாம். அவ்வாறு இவர் அறிமுகப்படுத்தி 'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குனரான முத்தையா... அந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த 'கொம்பன்' மற்றும் விஷால் நடித்த 'மருது' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கினார். கிராமத்து கதை களத்தை எப்போதுமே உணர்வுபூர்வமாக படம் பிடித்து காட்டும் முத்தையா மீண்டும் சசிகுமாரை இயக்கயிருக்கிறார்.
சமீபத்தில் 'கிடாரி' படத்தை தவிர தொடர்ந்து பெரிய வெற்றிப் படங்கள் எதையும் கொடுத்திடாத சசிகுமாருக்கு இந்த படம் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். இந்த படத்திற்கு 'கொடிவீரன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னனியில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை அருகே உள்ள கிராமத்தில் வரும் மார்ச் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது.
Tuesday, February 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment