Sunday, February 19, 2017

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை. தற்போதைய முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாடகை நாற்காலியில் அமர்ந்துள்ளார். இது நிரந்தரமானது அல்ல. சட்டசபை நுழைவு வாயிலில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தது தவறு.

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. அதே போன்று சபாநாயகரும் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதையும் ஏற்க முடியாது. இதற்காகவா பொதுமக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்திருந்தால் அது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer