Friday, February 17, 2017

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், ‘’தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வுகாண மறுதேர்தல் தேவை. தற்போதைய அரசு மீதுமக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது.

கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் சொல்லிக்கொடுத்ததை கூறுகிறார்கள். தங்கள் அரசு எது என்பது பற்றியே தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.  கூவத்தூரில் ஆயிரம் போலீசை காவலுக்கு நிறுத்த வேண்டிய அவசியம் என்ன?  எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய தேவை என்ன?

மக்கள் பிரதிநிதிகளுக்கான பணியை எம்.எல்.ஏக்கள் கவனிக்க வேண்டும்.  மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer