கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'கபாலி' திரைப்படம், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு... இந்திய அளவில் பல வசூல் சாதனைகளையும் புரிந்த தகவல் நாம் அறிந்ததே. தற்போது சங்கர் இயக்கும் 2.0 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதனை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் அந்த படத்தை அவரது மருமகன் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்போது படத்தின் நாயகி குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.
பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அதற்கு அவரது தரப்பிலும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'கபாலி' படத்திலேயே வித்யா பாலனை நடிக்க வைக்க முயற்சி நடந்து, கால்ஷீட் பிரச்சனைகளின் காரணமாக அந்த வாய்ப்பு ராதிகா ஆப்தேவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது அவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, February 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment