Monday, February 20, 2017

சமீபத்தில் ஜெய் நடித்து திரைக்கு வந்தப்படம் எனக்கு வாய்த்த அடிமைகள். இப்படத்தின் விளம்பரங்களுக்கு வாங்க என்று அழைத்த தயாரிப்பாளருக்கு நோ சொன்ன ஜெய், இவருக்கு சம்பந்தமேயில்லாத மகளிர் மட்டும் படத்தின் பிரமோஷனுக்காக வீட்டில் தோசை சுட்டு, அதை அஞ்சலிக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

சிங்கம் 3 திரையரங்குகளை பிடித்த நேரத்தில் பத்தே பத்து தியேட்டர்களில் மட்டும்தான் எனக்கு வாய்த்த அடிமைகள் ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது அதுவும் போச். தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம்.

இந்த வருத்தம் துளி கூட இல்லாமல் தோசை சுட்ட ஜெய்யை, எதில் போட்டு சுடுவது என்று தெரியாமல் நொந்து போயிருக்கிறார்கள் எ.வா.அ குழுவினர்.

விட்டால் ஜெய்க்கு எதிராக மெரீனா நிரம்புகிற அளவுக்கு கோடம்பாக்கத்தில் குமுறல் சப்தம் கேட்கிறது. புறக்கணிங்கப்பா... புறக்கணிங்க! ஜெய்யை புறக்கணிங்க!

0 comments :

Post a Comment

 
Toggle Footer