Sunday, February 19, 2017

மக்காவு இலிருந்து அண்மையில் மலேசியாவுக்கு வந்திருந்த வடகொரிய அதிபரின் சகோதரரான கிம் ஜொங் நம் மர்மமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

மலேசியாவின் சர்வதேச விமான நிலையத்தில் இவர் காத்திருந்த போது பின் தொடர்ந்து வந்த இரு வடகொரிய பெண்கள் இவருக்கு விஷ ஊசி செலுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதை அடுத்து உடனடியாக வரவேற்பறைக்குச் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு இவர் கோரியதாகவும் விரைந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்ட போதும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

கூடிய சீக்கிரமே பிரேத பரிசோதனை செய்யப் படவுள்ள கிம் ஜொங் நம் இனது உடல் மூலம் இது கொலையா அல்லது இயற்கை மரணமா எனக் கண்டு பிடிக்கப் படவுள்ளது. ஆயினும் இவரது வாக்குமூலப்படி விமான நிலையத்தி cctv கமெரா பதிவுகளை கண்காணித்து சந்தேகத்தின் பேரில் வியட்நாம் பாஸ்போர்ட் வைத்திருந்த பெண் ஒருவரை புதன்கிழமை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் இன்று வியாழக்கிழமை வெளியான தகவலில் இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதாகி இருப்பதாகத் தெரிய வருகின்றது.

வடகொரியாவின் மறைந்த முன்னால் அதிபரான கிம் ஜொங் இல் இன் மூத்த மகனான கிம் ஜொங் நம் மற்றும் தற்போதைய அதிபரும் இளைய மகனுமான கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி முன்னர் நிலவியதாகவும் அதனால் மர்மமான முறையில் கிம் ஜொங் நம் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் பரவலாக சந்தேகிக்கப் படுகின்றது.

இதேவேளை நம் படுகொலை செய்யப் பட்டது ஊர்ஜிதம் ஆகும் பட்சத்தில் வடகொரியாவின் சர்வாதிகாரமும் அடக்குமுறையும் வெளிப்படுத்தப் படும் எனத் தென்கொரியா கருத்துத் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer