Wednesday, February 22, 2017

"எடப்பாடி பழனிச் சாமி ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல் சசிகலா கையில் இருக்கிறது' என அ.தி. மு.க.வினர் பெருமையாக வும், எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டாகவும் சொல் லும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா எப்படி இருக்கிறார்...?

""பெங்களூருவில் தென்னிந்திய உணவு வகை களுக்குப் புகழ்பெற்ற பிலால் ஹோட்டலில்தான் சசி கலாவின் கணவர் நடராஜன் தங்கியுள்ளார். பெங்களூரு புறநகரில் மடிவாலா என்ற இடத்தில் அமைந்துள்ளது ஹாக்கின்ஸ் என்ற ஹோட் டல். இந்த இரண்டு ஹோட் டல்களிலும் சசிகலா உற வினர்களும் சசிகலாவுக்காக சட்ட உதவிகள் செய்யும் வழக்கறிஞர்களான நாமக்கல் செந்தில், அசோகன், பரணி குமார் உட்பட  பன்னிரெண்டு பேருக்கு மொத்தம் 20 அறை கள் நிரந்தரமாக புக்செய்து வைக்கப் பட்டிருக்கின்றன. இவர்களுடன் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தென்னரசு மற்றும் ஆறுமுகம் என 20 பேர் பரப்பன அக்ரஹார சிறை அமைந்துள்ள தமிழர் வாழும் பகுதியான நாகபுரம் கிராமத்தில் ஐந்து வீடுகள் எடுத்து தங்கியுள்ளனர். இப்படி 40 பேர் கொண்ட டீம் வெளியேயிருக்க... சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பரப்பன அக்ர ஹார சிறையில் இருக்கிறார் கள்'' என்கிறார் சசி குடும்ப விசுவாசி ஒருவர்.

சிறையைச் சுற்றி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சசிகலா வந்த பிறகு செல்போன் பேச்சுகளை தடுக்கும் ஜாமர் கருவிகள் சிறையில் பொருத்தப்பட்டன. பரப்பன அக்ர ஹார சிறையில் பெயர்பெற்ற கஞ்சா வினியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. சசி சிறைக்கு வந்ததுமே சிறையில் கடுமையான விதிகள் கடைப் பிடிக்கப்பட்டன. சசியுடன் வந்த சுதாகரன், சாதாரண தண்டனைக் கைதிகள் அடைக்கப்படும் பாரக்ஸ் (Barracks) என்கிற சிறையில் பத்து பேருடன் அடைக்கப் பட்டார்.

சிறப்பு வகுப்பு எனப் படும் வருமானவரி கட்டு பவர்களுக்கான அறைகள் சசிகலா உட்பட மூவருக்கும் ஒதுக்கப்படவில்லை. தண்ட னைக் கைதிகள் அணியும் உடை அணிவித்து தட்டு, போர்வையுடன் தண்டனைக் கைதிகளுக்கான செல் நம்பர் ஒன்னில் இள வரசியுடன் அடைக் கப்பட்டார்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer