Monday, February 27, 2017

ராஜபாளையத்தை அடுத்துள்ள சிதம்பராபுரத்தில்,  குமார் என்பவர் இறந்து போனதற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்திருந்தார்கள். போட்டோவில் கோட் போட்டு டை கட்டியிருந்த அவரை விவசாயி என்றார்கள். “இந்த கோட், டை மாட்டினதெல்லாம் போட்டோ ஸ்டூடியோக்காரங்க வழக்கமா பண்ணுற வேலை.. அவரு விவசாயிதான்..” என்றார்கள் சிதம்பராபுரம் கிராமத்தில்.

விவசாயி குமார் இறந்தது குறித்து இப்படிச் சொல்கிறார்கள் – “குமாருக்கு வயசு ஐம்பதுங்க.. வீட்டுக்காரம்மா பேரு எஸ்தர்.. அப்புறம் ரெண்டு பசங்க.. இங்கே அவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு.. வயல்ல மக்காச் சோளம் போட்டிருந்தார். மழை தண்ணி இல்லாம பயிரெல்லாம் வாடிருச்சு. பையனையும் கூட்டிக்கிட்டு வயலுக்குப் போனாரு குமார். பயிரெல்லாம் கருகிக் கிடந்ததைப் பார்த்து, அங்கேயே நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு சாய்ஞ்சுட்டார். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க.. போற வழியிலேயே மூச்சு நின்னு போச்சு.” என்றார்கள்.

வறட்சியின் காரணமாக, மழையின்றி விவசாயம் பொய்த்து வருவதையும், அதனால், விவசாயி மாண்டு போவதையும், தேசிய அவமானம் என்று சொல்லி வருகிறோம். இதற்கெல்லாம், தொலைநோக்குப் பார்வையுடன், ஒரு தீர்வு காண்பதற்கு நம் அரசாங்கத்துக்கு ஏனோ மனம் வரவில்லை? விவசாயிகள் மரணத்தில் இத்தனை அலட்சியமா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer