வடக்கு மாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தினை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில், பல தரப்புக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட வருகின்றன.
வனம், சுற்றாடல், நீர்வளம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட 5 அடிப்படைகளின் கீழ், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாங்குளத்தை தலைநகரமாக அபிவிருத்திச் செய்ய, ஏ-9 வீதியில் 31 ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளது. இதில் 1,400 ஏக்கர் காணியில் காடு காணப்படுகின்றது.
காடு மற்றும் நீர் நிலைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், கனகராயன்குளம் ஆற்றுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாங்குள நகர அபிவிருத்திக்காக இனங்காணப்பட்ட காணியில், காட்டு யானைகளின் வழித்தடங்கள் இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.”என்றுள்ளார்.
Friday, February 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment