Tuesday, February 21, 2017

இந்த வருடத்தின் மிக பிஸியான நடிகர் என்றால்.. அது தனுஷ் தான். ஏனெனில், கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறன் இயக்கத்தில்  ‘வடசென்னை’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படம் என பிஸியாக நடித்து வரும் அவர், ராஜ்கிரண் நடிக்கும் ‘பவர்பாண்டி’ என்கிற  புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இது இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து விஐபி2 படத்திற்கான பணிகளும் துவங்கியுள்ள நிலையில், தனது அடுத்த படம் யாருடன் என்ற முடிவையும் அவர் எடுத்து விட்டார்.

கடந்த வருடம் தனுஷிற்கு வெற்றி படமாக அமைந்த 'கொடி' திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமாருடன் தான் மீண்டும் அவர் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் சூசகமாக தெரிவித்துள்ள நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு  இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி என தொடர்ந்து தனுஷுடனே இணைந்து பணியாற்றும் துரை செந்தில்குமார்... நான்காவது முறையாக மீண்டும் இதில் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer