மறைந்த முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கபட்ட ரூ. 100 கோடி அபராததை கடன் வாங்கி தான் செலுத்துவோம் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பேட்டி அளித்துள்ளார். விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். போயஸ் கார்டன் இல்லத்திற்கு நானும் தீபாவும் தான் உரிமையாளர்கள். சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் இருப்பதுகுறித்து கவலையில்லை. ஜெயலலிதா அபராத தொகையை நானே கட்டுவேன்.
மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எதுவும் எழுப்ப வில்லை. ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க வில்லை எ ன தான் கூறி உள்ளார்.
தலைவர்தான் குறை என்றால் பன்னீர் செல்வம் கூட தலைவராக இருக்கலாம். கட்சி உடையக்கூடாது என்பது தான். பன்னீர் செல்வம் மீண்டும் அ.தி.மு.க திரும்ப வேண்டும். நாங்கள் தீபாவுக்கு எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
டி.டி.வி தினகரனை நாங்கள் யாரும் ஏற்றுகொள்ள மாட்டோம்.டிடிவி தினகரனை அடிப்படை உறுப்பினர்கள் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள். நானும் அடிப்படை தொண்டன் தான். ஓ.பி.எஸ். கட்சியின் தலைமை ஏற்க தினகரன் ஒத்து கொள்வார்.கட்சி தலைவர் பதவிக்கு டிடிவி தினகரன் தகுதி இல்லை.சசிகலா பொறுப்புக்கு வரலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தில் யாரும் வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, February 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment